செய்திகள் :

``தலைவர்கள் இப்படி இருந்தால், ஊழலை எதிர்த்து எப்படி போராட முடியும்?'' - பிரதமர் மோடி

post image

பதவி நீக்க மசோதா

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு, 30 சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை கடந்த 20-ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பிற்கு இதுவரை எந்தப் பதிலும் சொல்லாது இருந்த பிரதமர் மோடி, நேற்று அது குறித்து பேசியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மவுனம் கலைத்த பிரதமர்

பீகாரின் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பீகாரில் உள்ள கயாஜிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் மோடி.

அங்கு அவர் மக்கள் மத்தியில் பேசும்போது, "ஒரு அரசு பணியாளர் 50 மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அவரது வேலை தானாக போய்விடும். அவர் டிரைவர், கிளர்க் அல்லது பியூன் என யாராக இருந்தாலும்...

ஆனால், ஜெயிலில் இருந்தாலும் கூட, முதலமைச்சர், அமைச்சர், பிரதமர் அரசாங்கத்தில் நீடிக்க வேண்டுமா?

ஜெயிலில் இருந்துகொண்டு அரசை இயக்க ஏன் அனுமதி தர வேண்டும்? கறைபடிந்த அமைச்சர்கள் தங்களது பதவிகளில் தொடர வேண்டுமா? மக்கள் தங்கள் தலைவர்கள் தார்மீக நேர்மையை நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

`காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும்'

சில காலங்களுக்கு முன்பு, ஜெயில் இருந்துகொண்டு எப்படி கோப்புகள் கையெழுத்தாகின? ஜெயிலில் அரசாங்கம் எப்படி நடத்தப்பட்டது என்பதைப் பார்த்தோம். தலைவர்களிடம் இதுபோன்ற மனப்பான்மை இருந்தால், ஊழலை எப்படி எதிர்த்துப் போராட முடியும்?

நாடாளுமன்றம்

காங்கிரஸும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இந்த மசோதாவிற்கு எதிராக போராடுகிறார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர்கள் ஊழலில் எப்போதும் ஈடுபடுவார்கள் என்பது பீகாரில் இருக்கும் அனைவருக்கும் நன்கு தெரியும்" என்று பேசியுள்ளார்.

ஜெயிலில் இருந்துக்கொண்டு கோப்புகள் கையெழுத்தாகின என்று டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சாடியுள்ளார் பிரதமர் மோடி.

``விஜய் இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார்'' - திருமாவளவன்

த.வெ.க மாநாடு, தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை, அதிமுகவின் மீதான திமுகவின் விமர்சனம் குறித்து நேற்று விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.த.வெ.க மாநாடு"தமிழக வெற்ற... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும்இருக்கிறது. பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன... மேலும் பார்க்க

Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா?

உணவு சூடாக இருக்கையில் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிற சித்த மருத்துவர் செல்வ சண்முகம், தினமும் இருவேளை சூடாக சாப்பிடுவதற்கான வழிமுறைகளையும், 'பந்திக்கு முந்து' என்கிற பழமொழியின் பின்னணியில... மேலும் பார்க்க

USA - India: 2024 தேர்தல்; ``மோடியை தோற்கடிக்க வெளிநாட்டு சதி நடந்ததா?'' -அமெரிக்கா சொல்லும் செய்தி!

அமெரிக்கா நிதியுதவிஅமெரிக்கா, உலகளாவிய ஜனநாயக வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல நாடுகளுக்கு நிதியுதவி வழங்குகிறது. இந்தியாவிலும், வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்க மற்றும் தேர்தல் செயல்முறைகளை வ... மேலும் பார்க்க

மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maanadu | Vikatan

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டுக்காக தவெக சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே மாநாடு நடந்த... மேலும் பார்க்க

TVK: ``தப்புங்க அவர் என் தம்பி'' - தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு எம்.பி கமல்ஹாசனின் ரியாக்‌ஷன்

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில்... மேலும் பார்க்க