செய்திகள் :

TVK: ``தப்புங்க அவர் என் தம்பி'' - தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு எம்.பி கமல்ஹாசனின் ரியாக்‌ஷன்

post image

தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றினார்.

TVK மதுரை மாநாடு - விஜய்
TVK மதுரை மாநாடு - விஜய்

அதில், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்திருந்தார். 'அ.தி.மு.க வெளிப்படையாகவும், தி.மு.க மறைமுகமாகவும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலி வென்றுவிடலாம் எனத் தி.மு.க கனவு காண வேண்டாம். 2026 தேர்தலில் தி.மு.க த.வெ.க-வுக்கு மத்தியில்தான் போட்டி" எனப் பேசினார்.

இந்த நிலையில், நேற்று மாலை திமுக-வுடன் கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பேசும்போது, நான் மார்க்கெட் போனதற்கு பிறகு அரசியலுக்கு வரவில்லை. நான் வரும்போதே ஒரு பெரும் படை பலத்தோடுதான் வந்திருக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். இது குறிந்து உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்டது.

Kamal Haasan - கமல் ஹாசன்
Kamal Haasan - கமல் ஹாசன்

அதற்கு பதிலளித்த எம்.பி.கமல்ஹாசன், ``விஜய்-யின் பேச்சு குறித்து நான் என்ன கருத்து சொல்வது? எனது பெயரைச் சொல்லியுள்ளாரா? யார் பெயரையாவது சொல்லியுள்ளாரா? யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றால் அது முகவரி இல்லாத கடிதம். முகவரி இல்லாத கடிதத்துக்கு நான் பதில் போடலாமா? தப்புங்க அவர் எனது தம்பி" எனக் கடந்து சென்றுவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maanadu | Vikatan

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டுக்காக தவெக சார்பில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே மாநாடு நடந்த... மேலும் பார்க்க

அச்சச்சோ! அமெரிக்காவில் குறைந்த கச்சா எண்ணெய் இருப்பு - இனி என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்?

இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயும் இப்போது சுழன்று அடிக்கும் ஒரு வார்த்தை, 'கச்சா எண்ணெய்'. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளது ... மேலும் பார்க்க

TVK: ``கச்சத் தீவு பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை'' - விஜய்க்கு தமிழிசை கேள்வி

நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் உரையாற்றிய நடிகர் விஜய் பிரதமர் மோடியையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கச்சத்... மேலும் பார்க்க

TVK மாநாடு: தொண்டர்களால் குலுங்கிய மதுரை; மாநாட்டு திடல் காட்சிகள் | Photo Album

தவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மாநாடுதவெக மாநில மா... மேலும் பார்க்க

Trump 50% Tariff: ``அமைதியாக இருந்தால் கொடுமை அதிகரிக்கும்'' - இந்தியா உடன் கைகோர்க்கும் சீனா!

இந்தியா மீது இந்த மாதத்தின் தொடக்கத்தில் 25 சதவிகிதம் தான் வரி போட்டது அமெரிக்கா. அடுத்ததாக, இந்தியா ரஷ்யா உடன் வணிகம் செய்கிறது என்று 50 சதவிகிதமாக வரி உயர்த்தப்பட்டது. சீனாவிற்கு 'அதிக' வரி இல்லை! ஆ... மேலும் பார்க்க

Russia: ட்ரம்ப் வரி, உக்ரைன் போர் நிறுத்தம் தோல்வி; பரபரப்பான சூழலில் ஜெய்சங்கர் - புதின் சந்திப்பு!

ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது என்று அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளது. இருந்தும், இந்தியா ரஷ்யா உடனான வணிகத்தை கைவிடுவதாக இல்லை. ரஷ்யா உடன் இந்தியா வணிகம் ஏன்? காரணம், 2022-ம் ஆண்டு, ரஷ்ய... மேலும் பார்க்க