செய்திகள் :

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. 12 ராசிகளுக்கும்!

post image

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஆகஸ்ட் 22 - 28) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் புதிய பிரச்னைகள் ஏற்படாது. அதீத முயற்சி செய்து காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிட்டும். சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் புதிய சந்தையில் நுழைவீர்கள். விவசாயிகளுக்கு அனைத்து விவசாயப் பணிகளும் நல்லபடியாக முடியும்.

அரசியல்வாதிகள் மற்றவர்களைக் கவர்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். மாணவர்கள் படிப்பில் முதலிடத்தைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் தெரியும். குழந்தைகளுக்கு முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். வீட்டிலும் வெளியிலும் பெயர், புகழ் கூடும்.

உத்யோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்கள், பேச்சினால் அனைவரையும் வசிகரீப்பீர்கள். மாணவர்களால் பெற்றோருக்குப் பெருமை.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டுவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறைந்துபோகும். வெளியூர் பயணங்களால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறி தென்படும். வியாபாரிகள் விற்பனை முறைகளை மாற்றுவீர்கள். விவசாயிகள் லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு இருக்கும். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்கள், கணவனிடம் பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் விரும்பிய துறையில் முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும். ஆடம்பரமான வீட்டிற்கு மாறுவீர்கள். உறவினர்களின் வருகை வீட்டில் கலகலப்பை சேர்க்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு மனத்தெளிவு ஏற்படும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் அனுபவம் வெளிப்படும். கலைத்துறையினர் வெற்றிவாகை சூடுவீர்கள். குழந்தைகள் விஷயத்தில் பெண்கள் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவ மணிகள் சக மாணவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

நேர்முக, மறைமுக எதிர்ப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். பெற்றோர், உடன்பிறந்தோரின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலை மேம்படுத்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் கடையை அழகுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

அரசியல்வாதிகள் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படாது. அடமானப் பொருள்களை பெண்கள் மீட்பர். மாணவ மணிகளுக்கு உடல், மனநலம் சிறப்பாக இருக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றமடைவீர்கள். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர்.

உத்யோகஸ்தர், அலுவலகத்தில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் உடனுழைப்பவர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். விவசாயிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்.

அரசியல்வாதிகள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

பெண்மணிகள் குடும்பத்துடன் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் உயர் படிப்புகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். வெளியூர் பயணம் அமையும். வழக்கு விஷயங்கள் தாமதமாகும்.

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகளின் பிரச்னைகள் தீரும். விவசாயிகள் கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தன்னிச்சையாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் நுணுக்கமானதையும் கற்றுக்கொள்வீர்கள். பெண்கள் அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பீர்கள். மாணவ மணிகள் ஆசிரியர்களின் அறிவுரைப்படி நடந்துகொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எடுத்த காரியங்களில் விவேகத்துடன் செயல்படுவீர்கள். பழைய கடன்களை வசூலிப்பீர்கள். இறைப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களை மேலதிகாரிகள் புரிந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு உபரி வருமானம் கிடைக்கும். விவசாயிகள் நேர்த்தியான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு நிம்மதி ஏற்படும். கலைத்துறையினர் கலைப்பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடன் அந்நியோன்யம் கூடும். மாணவ மணிகள் சக மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

எதிர்காலம் சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். தேவைகள் நிறைவேறும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.

உத்யோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினரின் மதிப்பு அதிகரிக்கும். பெண்மணிகள், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவ

மணிகள் விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 22.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் தடையாக இருந்தவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உற்றார் உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்குக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாயிகள் புதிய கழனிகளை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அவப்பெயர் நீங்கும். கலைத்துறையினருக்கு தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். மாணவ மணிகள் ஊக்கத்துடன் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 23, 24.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். வருமானம் படிப்படியாக உயரும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியாகும். விவசாயிகள் நவீன விவசாய முறைகளைக் கையாளுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பழைய வழக்குகள் சாதகமாக முடிவடையும். கலைத்துறையினர் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்பீர்கள். பெண்மணிகள் பெரியோர்களை மதித்து நடப்பீர்கள். மாணவ மணிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 25, 26, 27.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

புதிய முயற்சிகள் எண்ணியபடி நடக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் சிறக்கும். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களை மதித்து நடப்பீர்கள். வியாபாரிகள் லாபமடைவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் உபரி வருமானம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் சூழ்நிலையறிந்து கருத்துகளை வெளியிடுவீர்கள். கலைத்துறையினர் கடமையிலேயே கண்ணாக இருக்கவும்.

பெண்மணிகள் புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஆகஸ்ட் 28.

அனுபமாவின் பரதா படத்திற்கு சாய் பல்லவி வாழ்த்து..! தொடரும் பிரேமம்!

நடிகை சாய் பல்லவி அனுபமாவின் பரதா படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் பல படங... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!

நடிகர் டாம் சாக்கோ நடிப்பில் உருவாகியுள்ள சூத்ரவாக்யம் என்ற மலையாள திரில்லர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நடிகை வின்சி அலோசியஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓடிடி வ... மேலும் பார்க்க

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இன்று (ஆக.22) மறுவெளியீடாகியுள்ளது. இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம... மேலும் பார்க்க

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவான இந்திரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு கொலையின்போதும் கொல்லப்பட்டர்களின் மணிக்கட்டு பகுதி துண்டிக்கப... மேலும் பார்க்க