சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீர்ரகள் சொதப்பிய நிலையில், மேத்திவ் பிரீட்ஜ்கி மற்றும் ஸ்டப்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்கள்.
சதமடிப்பார்கள் என எதிர்பார்த்த வேளையில் பிரீட்ஜ்கி 88, ஸ்டப்ஸ் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
ஆஸி. சார்பில் ஆடம் ஸாம்பா 3, எல்லீஸ், பிராட்லெட், லபுஷேன் தலா 2 விக்கெட்டும் ஹேசில்வுட் கடைசி விக்கெட்டையும் வீழ்த்த்னார்கள்.
3 போட்டிகளில் இந்தத் தொடரை 1-1 என ஆஸி. சமன்செய்ய வேண்டுமானால் 278 என்ற இலக்கை கடக்க வேண்டும்.