செய்திகள் :

நெல்லை: அமித் ஷா வருகை; ஆதரவு, எதிர்ப்பு, பரபரப்பு... நயினார் நாகேந்திரன் வீட்டில் தேநீர் விருந்து

post image

நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க-வினர் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தி.மு.க சார்பாக நகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பா.ஜ.க-வினர் கோபமடைந்தனர்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையாற்றி வருகிறார்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இந்தத் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் களப்பணிகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி பாரதிய ஜனதா கட்சி சார்பாக நெல்லையில் இன்று பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார். கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அவர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறங்குகிறார்.

பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு
பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு

அங்கிருந்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்குச் செல்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேநீர் விருந்தில் அமித் ஷா கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடக்கும் இடத்துக்குச் செல்கிறார்.

வரவேற்பும்.. எதிர்ப்பும்..!

நெல்லைக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்று சாலையின் இருபுறமும் கட்சிக் கொடிகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் அமித்ஷாவை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பிளக்ஸ் பேனர்களையும் சாலையோரங்களில் கட்டியுள்ளனர். அமித் ஷாவை வரவேற்று இந்தியில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் நெல்லை நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் அரங்கத்தில் உள்ளே பலத்த சோதனைக்குப் பின்னரே கட்சியினர் அனுமதிக்கப்படுகின்றனர். மாநாடு நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு
பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு

இதனிடையே, அமித் ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க- வின் நெல்லை மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக நெல்லை மாநகரம் முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

'மறக்க.மாட்டோம்.. மறக்கவே மாட்டோம்' என்ற தலைப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், "ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? ஒடியா பேசக்கூடியவர் தான் ஆள வேண்டும்" என ஒடிசா மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது அமித் ஷா பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களைக் கண்டதும் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க-வினர் அவற்றைக் கிழித்து எரிந்தனர். அத்துடன், அந்த போஸ்டர்களை மறைக்கும் வகையில் அமித் ஷாவை வரவேற்று எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினார்கள். இந்தச் சம்பவத்தால் நெல்லையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

புதுச்சேரி: `அபகரிப்பு’ புகாரில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார்; களமிறங்கிய கவர்னர்; பின்னணி என்ன?

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் வீடுகளையும், சொத்துக்களையும், ரௌடிகள் மற்றும் போலிப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது தொடர் கதையாகி வருகிறது. அபகரிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அரசியல... மேலும் பார்க்க

கேரளா: நடிகை உள்ளிட்டோர் பாலியல் புகார்; பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ; பின்னணி என்ன?

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மாங்கூட்டத்தில். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலக்காடு சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் போட்டியிட்டு எம்.பி-ஆனார். அதைத்தொடர்ந்... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: ”தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது; அதை தம்பி விஜய் பார்ப்பார்" - தமிழிசை காட்டம்

நெல்லை​யில் இன்று நடை​பெறும் பா.ஜ.க பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிரு... மேலும் பார்க்க

‘Vote Chori’ Row : `இக்கட்டில் சிக்கியுள்ளது வாக்காளரின் அதிகாரம்!' - இரா.சிந்தன்

மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்தன்"தேர்தல் ஆணையர் என்பவர், தேசக் கட்டமைப்பின் ஒரு பகுதி. ஆனால் அவர் அரசாங்கத்தின் ஒரு பகுதி அல்ல!" முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சே... மேலும் பார்க்க

காவல்துறையின் மெசேஜ்; கோட்டைவிட்ட பவுன்சர்கள்! - தவெக மாநாடு சீக்கிரமே முடிந்தது ஏன்?

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மதுரை மாநாட்டுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகளை செய்திருந்தனர். விக்கிரவாண்டி மாநாட்டை விட பிரமாண்டமாக இந்த மாநாட்... மேலும் பார்க்க

`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech | Vikatan

மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மாநாட்டில் பெண்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. பெண்களும் விஜய்யின் பேச்சை ஆர்வத்தோடு கேட்டிருந்தனர். மாநாடு முடிந்த பிறகு அங்கு க... மேலும் பார்க்க