எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
பஞ்சாப் மாநிலம் மாண்டியாலா கிராமத்தில் எல்பிஜி டேங்கர் லாரியும் டிரக் வாகனமும் மோதியதில், எல்பிஜி டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானார். 20 பேர் படுகாயமடைந்தனர்.
ஹோஷியார்பூர் - ஜலந்தர் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து நேரிட்டது. வாகனங்கள் மோதிய வேகத்தில், எல்பிஜி லாரி வெடித்துச் சிதறியது.
உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. பஞ்சாப் காவல்துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்த இடத்திலிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் செல்லும் வழியிலேயே பலியானார்.
விபத்து நடந்த இடம், தொழிற்சாலை பகுதி என்பதால், படுகாயமடைந்தவர்கள் தொழிலாளர்களா அல்லது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தவர்களா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.