செய்திகள் :

நீலம் தயாரிப்பின் பெயரில் போலி ஆடிஷன்கள்!

post image

பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின், நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், இதனால் நடிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித், “நீலம்” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், நடிப்பில் ஆர்வம் கொண்டு வாய்ப்புத் தேடும், மக்களை ஏமாற்றும் நோக்கில் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், அதனை யாரும் நம்பவேண்டாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டிருந்தாவது:

“போலியான ஆடிஷன் எச்சரிக்கை! நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் பெயரில் ஆடிஷன் அழைப்புகளை விடுக்கும் போஸ்டர்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் போலியானைவை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நீலம் தயாரிப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆடிஷன்களின் அழைப்புகள் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களிலும் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகக் கூறி, அந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!

Famous film director Pa. Ranjith's Neelam production company has announced that fake audition calls are being made in the name of the company, and actors should be wary of this.

அக்‌ஷய் குமார் - பிரியதர்ஷன் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர்கள் அக்‌ஷய் குமார், சயிஃப் அலிகான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்தியளவில் பிரபலமான இயக்குநரான பிரியதர்ஷன் 96 திரைப்படங்களை இயக்கிவிட்... மேலும் பார்க்க

இரண்டாவது தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

கஜகஸ்தானில் நடைபெறும் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தனது இரண்டாவது தங்கத்தை வென்றுள்ளார். முன்னதாக, 10மீ ஏர் ரைஃபிள் மகளிர் பிரிவில் இளவேனில் தங்கம் வென... மேலும் பார்க்க

4 மாதங்களில் 25 கிலோ எடை குறைத்த பெண்ணின் 10 டிப்ஸ் இதோ...!

உடல் எடை குறைப்பு என்பது இன்று பெரும்பாலானோருக்கு சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்தால்தான் அல்லது உணவைக் குறைதாலோ, தவிர்த்தாலோதான் உடல் எடையைக் குறைக்க முடியும் என்ற ... மேலும் பார்க்க

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

நடிகர் விஷ்ணு விஷாலின் ஆர்யன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ராட்சசன் படத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். தமிழின் முன்னணி... மேலும் பார்க்க

ஹாரி கேன் ஹாட்ரிக்: அபார வெற்றியுடன் (6-0) சீசனை தொடங்கிய பயர்ன் மியூனிக்!

ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா கோப்பையின் முதல் போட்டியில் பயர்ன் மியூனிக் அணி 6-0 என வென்றது. நடப்பு சாம்பியனான பயர்ன் மியூனிக் அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்பட... மேலும் பார்க்க

தமிழ் தலைவாஸ் முதல்முறையாக கோப்பையை வெல்லும்..! துணை கேப்டன் பேட்டி!

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என அதன் துணை கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் கூறியுள்ளார். புதிய தலைமைப் பயிற்சியாளா் மற்றும் பலப்படுத்தப்பட்ட அணியுடன், புரோ கபடி லீக் 12... மேலும் பார்க்க