சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
நவீன் பட்நாயக்கை சந்தித்து ஒடிசா முதல்வர் நலம் விசாரிப்பு
புவனேஸ்வரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி நலம் விசாரித்தார்.
நவீன் நிவாஸ் எனப்படும் பட்நாயக்கின் இல்லத்தில் சுமார் 15 நிமிடங்கள் முதல்வர் இருந்துள்ளார். நவீன் நிவாஸுக்கு முதல்வர் மோகன் சரண் செல்லும் இரண்டாவது முறை இதுவாகும்.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூனில், தனது பதவியேற்பு விழாவுக்கான அழைப்பை வழங்குவதற்காக நவீன் பட்நாயக்கை அவர் சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் மோகன் சரண், “எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை அவரது புவனேஸ்வர் இல்லத்தில் சந்தித்து உடல்நிலைப் பற்றி விசாரித்தேன்.
அவர் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ ஜெகநாதரிடம் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நவீனுக்கு கை கொடுக்கும் மற்றும் அவரோடு உரையாடும் இரண்டு புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம் அமைக்க வேண்டும் - அண்ணாமலை
ஒடிஸா எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக்கிற்கு (78), நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு அண்மையில் வீடு திரும்பினார்.