செய்திகள் :

ராமநாதபுரம்: வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற சகோதரிகள்; இடி தாக்கியதால் உயிரிழந்த சோகம்; என்ன நடந்தது?

post image

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நூருல் அமீன்- கையர் நிஷா. இவர்களது மகள்களான செய்யது அஸ்மியாபானு மற்றும் சபிக்கா பானு ஆகிய இரண்டு பேரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று விடுமுறை என்பதால் அவர்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததுடன் வானம் மந்தாரமாகக் காணப்பட்டுள்ளது.

இடி தாக்கி மாணவிகள் பலியான இடம்
இடி தாக்கி மாணவிகள் பலியான இடம்

இந்நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள தோப்பிற்குச் சென்ற சிறுமிகள் இருவரும், அங்குள்ள வேப்ப மரத்தில் இருந்து விழும் பழங்களில் உள்ள வேப்பமுத்துகளைச் சேகரித்து கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் திடீரென வானம் இடியும் மின்னலுமாகக் காணப்பட்டுள்ளது. இதனால் பயந்து போன சகோதரிகள் இருவரும் தாங்கள் வேப்பமுத்து சேகரித்து கொண்டிருந்த மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றுள்ளனர்.

அந்நேரத்தில் பலத்த இடி ஒன்று அந்த வேப்பமரத்தினைத் தாக்கியுள்ளது. இதில் வேப்பமரத்தின் அடியில் நின்ற சகோதரிகள் இருவர் மீதும் இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குழந்தைகள் உயிரிழந்ததால் கதறி அழும் தாய்

இந்நிலையில் வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற குழந்தைகள் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர் குழந்தைகளைத் தேடி சென்றனர். அப்போது வேப்பமரத்தின் அடியில் இருவரும் இடி தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர்.

தகவல் அறிந்து வந்த சத்திரக்குடி காவல் நிலைய போலீஸார் இடிதாக்கி உயிரிழந்த சிறுமிகள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ராமநாதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: குண்டும் குழியுமான சாலையால் பலியான உயிர்; நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு; பின்னணி என்ன?

மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் சாலை முழுக்க குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. மும்பை அருகில் உள்ள பிவாண்... மேலும் பார்க்க

TVK மதுரை மாநாடு: "குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது" - மாநாட்டில் உயிரிழந்த ஊட்டி இளைஞர்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்... மேலும் பார்க்க

விருதுநகர்: நோய், வறுமை, மன உளைச்சல்.. பேச முடியாத மகள்களுடன் ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த தாய்

விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது ... மேலும் பார்க்க

விருதுநகர்: தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவர்; மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர். இந்த நி... மேலும் பார்க்க

மும்பை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்; அந்தரத்தில் உயிருக்கு போராடிய பயணிகள்; கிரேன் மூலம் மீட்பு

மும்பை மோனோ ரயில்மும்பையில் செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை மோனோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த ஒரு மோனோ ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த மோனோ ரயில் ஒரு சிமெண்ட் பீம... மேலும் பார்க்க

விருதுநகர்: எரிந்து சாம்பலான வைக்கோல் கட்டுகள்; 4 மணி நேரத்திற்கு மேல் போராடிய வீரர்கள் |Photo Album

மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று எரிந்த வைக்கோல்மட மடவென்று... மேலும் பார்க்க