செய்திகள் :

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

post image

கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10 வயது சிறுமியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியகியுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் ஒருவன், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் அந்தச் சிறுமியின் வீட்டிலுள்ள ஒரு கிரிக்கெட் மட்டையை திருடுவதற்காக சம்பவ நாளான ஆக. 18 அன்று காலை அந்த வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் சென்றதாக கூறப்படுகிறது. வீட்டில் யாருமில்லை என்று நுழைந்த சிறுவன், அங்கிருந்த சிறுமியின் கண்ணில் பட்டுள்ளார்.

உடனே அந்தச் சிறுமி கத்தியுள்ளார். இதனால் திடுக்கிட்ட சிறுவன் தன்னிடமிருந்த ஒரு கத்தியால் அந்தச் சிறுமியைக் குத்தியுள்ளார்.அதில் சிறுமி உயிரிழந்தார்.

சிறுவன் பயன்படுத்திய ஆயுதமும் அவரிடமிருந்த காகிதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் திருட திட்டம் தீட்டி அவர் வரைபடம் உள்ளிட்டவை வரைந்திருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இணையதளங்களில் திருட்டு, கொலை சம்பந்தப்பட்ட பல காணொலிகளை அந்தச் சிறுவன் பார்த்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

murder of 10-year-old girl in Kukatpally; a 14-year-old boy from a neighbouring house stabbed her

எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்பு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அனில் அம்பானி தரப்பு நிராகரித்துள்ளது. இதனிடையே, எஸ்பிஐ புகாரின்பேரில், சிபிஐ அதி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!

ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர்.கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜார்க்கண்டின் ராஞ்சியில் நியூ மார்க்கெட் சௌக் அருகே பேருந்தில் இருந்து காரில் மாற்றப்பட்டபோத... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய ... மேலும் பார்க்க

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலா... மேலும் பார்க்க