India China Ties: இந்தியாவோடு திடீர் நெருக்கம் சீனாவை நம்பலாமா? | Decode
ஓடிடியில் மாரீசன்!
மாரீசன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியிருந்தார்.
வடிவேலுவின் நடிப்புடன் முதல் பாதி சிறப்பாக இருந்தாலும் இரண்டாம் சிறிய ஏமாற்றத்தை கொடுத்ததால் படத்தின் வெற்றி விகிதம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரூ. 8 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், மாரீசன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: பாரதிராஜா நடிக்கும் புலவர் படத்தின் முதல் பார்வை வெளியீடு!