எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்ப...
TVK மதுரை மாநாடு: ``மகத்தான வெற்றி; செயல்மொழிதான் தாய் மொழி" - தொண்டர்களுக்கு தவெக விஜய் நன்றி
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு 21-ம் தேதி நடந்தது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தவெக தலைவர் விஜய், தன் எக்ஸ் பக்கத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ``சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், சத்திய நீதி காத்த மதுரையில், உரிமை காக்கும், உறவு காக்கு மதுரையில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடின் வெற்றி என்பது உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும் பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது" என ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். முழு அறிக்கை இதோ...