சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!
இரண்டாவது தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!
கஜகஸ்தானில் நடைபெறும் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தனது இரண்டாவது தங்கத்தை வென்றுள்ளார்.
முன்னதாக, 10மீ ஏர் ரைஃபிள் மகளிர் பிரிவில் இளவேனில் தங்கம் வென்றிருந்தார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீ ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பபிதா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
இந்திய அணியினர் சீனாவின் கலப்பு இரட்டையரை 17-11 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்கள்.
தமிழகத்தில் பிறந்த இளவேனிலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா ஒட்டுமொத்தமாக 21 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தமாக சீனா 9 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
Indian air rifle mixed team wins at Asian Shooting Championships 2025
— Khel Now (@KhelNow) August 23, 2025
Arjun Babuta and Elavenil Valarivan defeated China 17-11 in the final
Big congratulations to Elavenil, her second gold at Shymkent #AsianShootingChampionships#Shootingpic.twitter.com/AEKjRm8tX8