செய்திகள் :

ஹிமாசலில் தீவிரமடையும் கனமழை! 339 சாலைகள் மூடல்!

post image

ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் 339 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலப் பிரதேசத்தின், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. பருவமழை தொடங்கியது முதல் கடுமையான மழைப் பொழிவை எதிர்கொண்டு வரும் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் ஆக.24 முதல் ஆக.26 ஆம் தேதி வரை கனமழைக்கான ”மஞ்சள் அலரட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்பட 339 முக்கிய சாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மண்டி மாவட்டத்தில் 162 சாலைகளும், குல்லுவில் 106 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலை 305-ம் தற்காலிகமாக மூடப்படுவதாக, ஹிமாசலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல், ஹிமாசலில் பெய்து வரும் பருவமழையின் தாக்கத்தால் இதுவரை 75 திடீர் வெள்ளம், 39 மேகவெடிப்புகள் மற்றும் மிகப் பெரியளவிலான 74 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், 151 பேர் பலியானதுடன், 37 பேர் மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

It has been reported that 339 roads in Himachal Pradesh have been closed due to continuous heavy rains.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்! விரைவில் வேறு இடத்துக்கு மாற்றம்!

புது தில்லி: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம் விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.புது தில்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தின் முக்கியமான நுழைவாயிலான ‘கஜ்தார்’ பகுதியிலுள்ள... மேலும் பார்க்க

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பைத் தொட்டியில் 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு

மும்பையில் எக்ஸ்பிரஸ் ரயில் கழிப்பறையின் குப்பைத் தொட்டியில் இருந்து 4 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்கும் எல்டிடி-க்கும் இடையே தினமும் குஷிநகர் எக்ஸ்பிரஸ்... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பற்றாக்குறை மாறி, ஜனநாயகத்தில் பற்றாக்குறையான சூழல்! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் ஜனநாயகத்தில் பற்றாக்குறை என்னும் சூழல் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெ... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதல்: 6 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச் சுவர் மீது போலீஸ் வாகனம் மோதியதில் 6 காவலர்கள் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் போலீஸ் வாகனத்தில் ஹாதிகவன் சென்றுகொண்டிருந்தனர். சன... மேலும் பார்க்க

தேர்தல் வெற்றிக்கு ஜம்முவில் இருந்துக்கூட வாக்காளர்களைச் சேர்ப்போம்: கேரள பாஜக துணைத் தலைவர்!

வாக்குத் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் வாக்காளர்களை இணைப்போம் என கேரள பாஜக துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன் பேசி... மேலும் பார்க்க

ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞர் கைது

மதுபோதையில் ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். மகராஷ்டிர மாநிலம், அந்தேரியைச் சேர்ந்த கடைக்காரர் சுஜித் துபே(30). இவர் மதுபோதையில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.... மேலும் பார்க்க