செய்திகள் :

தேர்தல் வெற்றிக்கு ஜம்முவில் இருந்துக்கூட வாக்காளர்களைச் சேர்ப்போம்: கேரள பாஜக துணைத் தலைவர்!

post image

வாக்குத் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் வாக்காளர்களை இணைப்போம் என கேரள பாஜக துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்று, அம்மாநிலத்தைச் சேர்ந்த முதல் பாஜக எம்.பியாக நடிகர் சுரேஷ் கோபி தேர்வானார்.

வாக்குத் திருட்டு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுப்பொருளாகியுள்ள சூழலில், திருச்சூர் தொகுதியில் சட்டவிரோதமாக பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர் எனும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களுடன் நேற்று (ஆக.22) பேசிய கேரள பாஜக துணைத் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் விரிவாக வாக்காளர்களைச் சேர்ப்போம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

“நாங்கள் வெற்றி பெற வேண்டும் எனக் கருதும் தொகுதிகளில், வாக்காளர்களை விரிவாகச் சேர்ப்போம். இதற்காக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்களைக் கூட ஓராண்டிற்கு அந்தத் தொகுதியில் தங்கவைத்து பின்னர் அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்போம். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்

கேரளத்தில் போட்டியிடும் நான் வெற்றியடைய வேண்டுமென காஷ்மீரிலுள்ள யாரேனும் நினைத்தால் என்ன செய்வது? அதனால், அவர்கள் இங்கு வந்து வாக்களிக்க முடியும்” எனப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கேரளத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், இதுபோன்று வாக்காளர்களைச் சேர்க்க ஏதேனும் திட்டமுள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதுபற்றி பின்னர் முடிவுச் செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.

இதனால், வாக்குத் திருட்டு எனும் குற்றச்சாட்டை கேரள பாஜக ஒப்புக்கொள்கின்றதா? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில், திருச்சூர் தொகுதியில் சட்டவிரோதமான முறையில் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

As the issue of vote rigging has created huge ripples across the country, Kerala BJP Vice President P. Gopalakrishnan has said that we will unite voters to win the elections.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய ... மேலும் பார்க்க

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்ப... மேலும் பார்க்க

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 3ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல்: மயக்கவியல் மருத்துவர் கைது!

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக தேடப்பட்டுவந்த மயக்கவியல் மருத்துவரை தெலங்கானா சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு நெருக்கமான சில மருத்துவர்... மேலும் பார்க்க