செய்திகள் :

நாடாளுமன்றத்தில் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்! விரைவில் வேறு இடத்துக்கு மாற்றம்!

post image

புது தில்லி: பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம் விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

புது தில்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தின் முக்கியமான நுழைவாயிலான ‘கஜ்தார்’ பகுதியிலுள்ளதொரு மரம், பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடுமோ என்கிற நிலை உருவாகியுள்ளது.

சில்வர் ட்ரம்ப்பெட் ட்ரீ என்று வர்ணிக்கப்படும் மஞ்சள் மலர்கள் நிறைந்த இந்த மரம், முக்கிய விஐபிக்கள் செல்லும் வழிப்பாதையில் இடைஞ்சலாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற வளாகத்துக்குள் ‘கஜ்தார்’ பகுதி வழியாகவே பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் சென்று வருகிறது. இந்தச்சூழலில், பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி.), மேற்கண்ட மரத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று கருதுகிறார்கள்.

இதனையடுத்து, எஸ்.பி.ஜி. கோரிக்கையின்பேரில் மத்திய பொதுப்பணித் துறையால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஏற்று மரத்தைப் பிடுங்கி வேறு இடத்தில் நட தில்லி வனத்துறை விரைவில் அனுமதி வழங்கியவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல மணிநேரம் அமளியால் முடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த வாரம் முடிவடைந்துவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் மரம் நடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசியத் தலைவர்கள் சிலைகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ள பிரேர்நா ஸ்தலம் பகுதியில் அந்த மரத்தை நடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Parliament's 'number 01' tree poses security challenge, to be transplanted soon

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்ப... மேலும் பார்க்க

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 3ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல்: மயக்கவியல் மருத்துவர் கைது!

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக தேடப்பட்டுவந்த மயக்கவியல் மருத்துவரை தெலங்கானா சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு நெருக்கமான சில மருத்துவர்... மேலும் பார்க்க

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10 வயது சிறுமியொரு... மேலும் பார்க்க