Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
ஹாரி கேன் ஹாட்ரிக்: அபார வெற்றியுடன் (6-0) சீசனை தொடங்கிய பயர்ன் மியூனிக்!
ஜெர்மனியில் நடைபெறும் புன்டெஸ்லீகா கோப்பையின் முதல் போட்டியில் பயர்ன் மியூனிக் அணி 6-0 என வென்றது.
நடப்பு சாம்பியனான பயர்ன் மியூனிக் அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பயர்ன் மியூனிக் அணி இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்பி லெய்ப்ஜிக் அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் ஹாரி கேன் ஹாட்ரிக் (64’, 74’, 77’) கோல் அடித்து அசத்தினார். இந்தத் தொடரில் இது 8-ஆவது ஹாட்ரிக் கோல். இதற்கு முன்பாக ஹாரி கேன், பிரீமியர் லீக்கிலும் 8 ஹாட்ரிக் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 63 சதவிகித பந்தினை பெயர்ன் மியூனிக் அணியினரே தக்க வைத்தனர். எதிரணி இலக்கை நோக்கி 1 முறை மட்டுமே அடிக்க முயல அதையும் கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.
மொத்தம் 34 போட்டிகள் (17 ஹோம், 17 அவே) கொண்ட இந்த புன்டெஸ்லீகா தொடரில் பயர்ன் மியூனிக் அணி அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது.