செய்திகள் :

நள்ளிரவில் உத்தரகண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்! 2 பேர் மாயம்!

post image

உத்தரகண்ட் மாநிலத்தில், நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமோலி மாவட்டத்தின், தாராலி நகரத்தில் நேற்று (ஆக.22) நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தாராலி முழுவதும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் மற்றும் வாகனங்கள் சூழ்ந்து காணப்படும் நிலையில், சாக்வாரா மற்றும் செப்தோன் சந்தைப் பகுதியில் 2 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாக்வாரா பகுதியைச் சேர்ந்த கவிதா (வயது 20) உள்பட 2 பேர் மாயமானதால், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாராலியில் உள்ள முக்கிய கட்டமைப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் மாநில மீட்புப் படைகள் உடனடியாக களமிறக்கப்பட்டன. ஆனால், அந்நகரத்தை இணைக்கும் கார்னாப்ரயாக் - குவால்டம் நெடுஞ்சாலையில் இடிபாடுகள் சூழ்ந்து முடங்கியுள்ளதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண முகாம்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மூன்று மண்டலங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரகாசியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, ஒருவர் பலியானதுடன் சுமார் 65 பேர் மாயமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?

Two people have been reported missing in Uttarakhand due to floods caused by heavy rains since midnight.

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமோலி மாவட்டத்த... மேலும் பார்க்க

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!

பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் ... மேலும் பார்க்க

இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

இந்திய வான்வழியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஆபரேஷன் ... மேலும் பார்க்க

மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மிசோரமில் பைராபி-சாய்ராங் ரயில் பாதையை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பதாக முதல்வர் லால்துஹோமா தெரிவித்தார். சாய்ராங் தலைநகருக்கு அருகில் அமைந்திருப்பதால், இந்த ரயில் பாதை ஐஸ்... மேலும் பார்க்க

40% முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்! முதலிடத்தில் இருப்பவர் யார்?

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களில் 40 சதவீதம் பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 ந... மேலும் பார்க்க