செய்திகள் :

பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!

post image

பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.

பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை ஆக. 17 முதல் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.

அதன் ஒருபகுதியாக, இன்று கத்திஹாரில் உள்ள மக்கானா விவசாயிகளுடன் கலந்துரையாடினார். விவசாயிகளுடன் தாமரை குளத்தில் இறங்கியும் அங்கு மக்கானா பயிர் நடவு செய்வதையும் அவர் பார்வையிட்டார்.

பிகாரில் மக்கானா உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் மொத்த மக்கானாவில் சுமார் 80 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை பகல்பூரில் நடந்த வாக்காளர் யாத்திரையில் ராகுலுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டார். வரவிருக்கும் தேர்தல் பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடைசி தேர்தல் என்று கூறினார், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வரமாட்டார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi meets Makhana farmers in their farms in Katihar on Saturday during his on-going 'Voter Adhikar Yatra'.

சட்டவிரோத பந்தய வழக்கு: கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா கைது!

சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய மோசடி தொடர்பாக சித்ரதுர்காவைச் சேர்ந்த கர்நாடக எம்எல்ஏ கே.சி. வீரேந்திராவை அமலாக்கத்துறை சனிக்கிழமை அதிரடியாகக் கைது செய்தது. பந்தய மோசடி தொடர்பாக அமலாக்கத்துற... மேலும் பார்க்க

ஹிமாசலில் தீவிரமடையும் கனமழை! 339 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் 339 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிமாசலப் பிரதேசத்தின், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. ப... மேலும் பார்க்க

வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர... மேலும் பார்க்க

அயோத்தியா, பிரயாக்ராஜ் தொடர்ந்து பெயர் மாறப்போகும் நகரம் இதுவா?

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமோலி மாவட்டத்த... மேலும் பார்க்க

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க