செய்திகள் :

ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசம்..! வங்கதேச இடைக்கால அரசை கண்டிக்கும் அவாமி லீக்! ஏன்?

post image

வங்கதேசத்தின், முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில், ஆட்சி கவிழ்க்கப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகளை வெளியிடும் ஊடகங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால அரசு நேற்று (ஆக.22) அறிவித்திருந்தது.

இதில், ஷேக் ஹசீனா மீது இனப்படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், அவர் குறித்த செய்திகளை வெளியிட்டால், அது சட்டவிரோதம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

“சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர், கொலையாளி, பாசிசவாதியுமான யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள், அவாமி லீக் கட்சியின் தலைவரும், மரியாதைக்குரிய பிரமருமான ஷேக் ஹசீனாவின் பேச்சுக்களை வெளியிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் ஊடகங்களை ஒழுக்கக்கேடான முறையில் அச்சுறுத்தியுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், யூனுஸ் மற்றும் அவரது இடைக்கால அரசு வங்கதேசத்தில் கும்பல் மற்றும் பாசிச ஆட்சியை நடத்துவதாகவும், அந்நாட்டை பிரிவினைவாதத்தை நோக்கி கொண்டுச் செல்வதாகவும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, வங்கதேசத்தில் வரும் 2026-ம் ஆண்டு பொது தேர்தல்கள் நடத்தப்படும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அதற்கான, ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டதாக இடைக்கால அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தேசியளவில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரது ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க! ஆக. 26 வரை காவல்!

Sheikh Hasina's Awami League party has issued strong condemnations against the actions of the interim government led by Muhammad Yunus in Bangladesh.

உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

மிகத் திறமையான இளைஞர்கள்கூட, வேலைக்கான நேர்காணலின்போது கேட்கப்படுத் மிகப்பொதுவான கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்லத் தெரியாமல் தவிப்பார்கள்.தனது இளமைக் காலத்தில் எண்ணற்ற நேர்காணல்களிடம் இடம்பெற்றிர... மேலும் பார்க்க

நெதர்லாந்தில்..! இஸ்ரேல் மீது தடை விதிக்க முடியாததால் பதவி விலகிய அமைச்சர்!

காஸா மீதான போரினால், இஸ்ரேலுக்கு எதிராகத் தடைகளைப் பெற முடியாததால், நெதர்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேஸ்பர் வெல்ட்காம்ப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். நெதர்லாந்து நாடாளுமன்றத்தில், காஸா ம... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் உருவாகியிருக்கும், ஆனால், நான்தான் அதை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மீண்டும் கூறியிருக்கிறார்.ஆனால், இந்த முறை, ஓவல் அலுவலகத்தில... மேலும் பார்க்க

ரணில் விக்ரமசிங்க கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மகிந்த ராஜபக்ச

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்... மேலும் பார்க்க

கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!

அரசு நிதியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. ரண... மேலும் பார்க்க

உலகின் கடைசி சாலை முடியும் இடம்! அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லையாம்!!

உலகம் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி ஏதோ ஓர் இடத்தில் முடிகிறது என்றால், அந்த கடைசி சாலை முடியும் இடம் நார்வேயில் அமைந்துள்ளது.நமது கிரகம் ஒரு கோளம் என்பதால் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை. ஆனால், ஓரிடத்துக்க... மேலும் பார்க்க