``ஹனுமான் வழிபாடு கிடையாது; ராவணன் எங்கள் முன்னோர்'' - மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ...
ஜார்க்கண்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: கனமழைக்கு 5 பேர் பலி!
ஜார்க்கண்டின் பெய்துவரும் கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் அவரது ஏழு வயது மகனும் இறந்தனர்.
ராஜ்நகர் தொகுதியில் உள்ள தண்டு கிராமத்தில் கனமழைக்கு எட்டு பேர் காயமடைந்தனர். சந்தோஷ் லோஹர் என்பவரின் குடிசை வீடு இடிந்து விழுந்ததில் மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ஒருவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கர்சவான் காவல் நிலையப் பகுதியில் உள்ள கோல் சிம்லாவில் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னா போத்ராவின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அவரது ஐந்து வயது மகன் சம்பவ இடத்திலேயே இறந்தார், போத்ரா, அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது மகள் காயமடைந்தனர். அவர்கள் செரைகேலா சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்ரா மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை பெருக்கெடுத்து ஓடும் சியாரி ஆற்றில் ஒரு தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கணவரின் உடல் மீட்கப்பட்டது, மனைவி மாயமாகியுள்ளார்.
மழை தொடர்பான சம்பவத்தில் மாவட்டத்தின் பதல்கடா தொகுதியில் உள்ள கைரடோலா கிராமத்திலும் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன, வீடுகள் இடிந்து விழுந்தன, சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
ராஞ்சியில், பிஸ்கா நிலையத்திற்கு அருகில் கட்டுமானத்தில் உள்ள ரயில் மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள கான்கிரீட் பலகைகள் இடிந்து விழுந்ததால், தேசிய நெடுஞ்சாலை 43 இல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் 25 வரை மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.