சினிமாவும் சாப்பாடும் தான் இங்கு பிரதானம்! - சென்னையின் பொன்னான நினைவலை #Chennai...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்
சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில நாள்களாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பின் காரணத்தினால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருந்தது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீரானது அப்படியே மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணத்தினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணை உபரி நீர் கால்வாயான 16 கண் மதகு வழியாக வெளியற்றப்பட்டு வந்த உபரி நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி என்ற அளவில் இருக்கிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 850 கன அடி வீதம் திறக்கப்படுகிறது.