செய்திகள் :

மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் பலி: ரூ. 20 லட்சம் நிதியுதவி; கணவருக்கு அரசு வேலை..!

post image

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ. 20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை (ஆக.23) காலை சென்னை கண்ணகி நகரில் அப்பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி(30) பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இரவு பெய்த மழையால் தேங்கிருந்த மழைநீரில் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீரில் விழுந்துள்ளாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்க முயற்சி செய்து முடியவில்லை. தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து வரலட்சுமி உடலை மீட்டனர்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நடந்ததாக அந்த பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன், வரலட்சுமியின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ. 10 லட்சம், ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ. 10 லட்சம் என வரலட்சுமியின் குடும்பத்தினரிடம் ரூ. 20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கினார்.

மேலும், வரலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Minister Ma. Subramanian gives a cheque for Rs. 20 lakhs as financial assistance to the family of a sanitation worker who died due to electrocution in Chennai.

மத்திய அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு! தமிழக விவசாயிகள் பற்றி ஆலோசனை!

தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசியுள்ளார். தில்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு சில நாள்களாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பின் காரணத்தினால் மேட்டூர... மேலும் பார்க்க

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

பொன்னேரி அருகே மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி அந்தரத்தில் அரசுப் பேருந்து தொங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியி... மேலும் பார்க்க

8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதியில் ஓரிசா - மேற்கு... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பின்... தொடர்ந்து 3 நாள்கள் கனமழை!

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 29 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து மூன்று நாள்கள் கனமழை பெய்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் ஜான் பிரதீப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் இன்ற... மேலும் பார்க்க