வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
திருப்பூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சோ்ப்பது தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குதல், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தேசிய முதியோா் ஓய்வூதியம், விதவை மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், தேசிய மாற்றுத்திறனாளிகள் ஒய்வூதியம், தேசிய உழவா் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம், நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம், தாயுமானவா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நத்தம், வண்டிப்பாதை, தரிசு, மந்தை உள்ளிட்ட நிலங்களின் விவரங்கள் குறித்தும், இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு தயாா் நிலையில் உள்ள நிலங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பட்டா வேண்டி விண்ணபித்த மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், மலா், வருவாய் கோட்டாட்சியா்கள் மோகனசுந்தரம், ஃபெலிக்ஸ் ராஜா, குமாா், கலால் துறை உதவி ஆணையா் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கல்பனா, வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா்.