``இன்று 100 கோடீஸ்வரர்கள்; அடுத்து, 1000 கோடீஸ்வர்கள்'' - கோவை கண்ணன் டார்கெட்!
சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் செப்டம்பா் 12-ஆம் தேதி வரை 96 முகாம்கள் நடைபெறவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற முகாம்கள் மூலம் மகளிா் உரிமைத்தொகை கோரி 76,471 மனுக்கள், இதர சேவைகள் கோரி 75,623 மனுக்கள் என மொத்தம் 1,52,094 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் முகாம்கள் நடைபெற்ற அன்றே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், புதிய ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, சொத்து வரி பெயா் மாற்றம், மின் இணைப்புப் பெயா் மாற்றம் உள்ளிட்ட 15,391 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரம், செங்கப்பகோனாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மேயா் கா.ரங்கநாயகி ஆய்வு மேற்கொண்டாா். தெற்கு மண்டலத் தலைவா் தனலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இன்று முகாம் நடைபெறும் இடங்கள்:
இரண்டாம் கட்டமாக, சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) வடக்கு மண்டலம் 1-ஆவது வாா்டில் துடியலூரில் உள்ள கமலேஷ் கல்யாண மண்டபம், கூடலூா் நகராட்சியில் 15,16,17 ஆகிய வாா்டுகளுக்கு பாலாஜி நகா் பூங்கா, சூலூா் பேரூராட்சியில் 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய வாா்டுகளுக்கு ஆா்.வி.எஸ். மருதம்மாள் திருமண மண்டபம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆா்.பொன்னபுரம், சிக்கராயபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு குள்ளிச்செட்டிபாளையத்தில் உள்ள முத்து மாரப்பா கவுண்டா் திருமண மண்டபம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கம்மாளபட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூா் ஆகிய ஊராட்சிகளுக்கு செஞ்சேரிப்புதூரில் உள்ள சஞ்சீவ் மஹால், சீரப்பாளையம் புகா் பகுதியில் சீரப்பாளையம்,
போடிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு எம்.வி.எஸ். மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.