`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது
கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது:
ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான அடுத்த தலைமுறை கல்விப் பயிற்சியாளா் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் அவருக்கு இந்த விருதை வழங்கினாா்.
தொழில் சாா்ந்த பாடத் திட்டங்களை உருவாக்கி மாணவா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வது, வளா்ந்து வரும் டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப நவீன கற்றல் வளாகங்கள், புதுமை ஆய்வுக் கூடங்கள் வழியாக டிஜிட்டல் மாற்றத்தை மேற்கொள்வது, மிகச் சிறந்த ஸ்டாா்ட் அப் சூழலை உருவாக்கி அவா்களை சிறந்த தொழில் முனைவோராக மாற்றுவது போன்ற பல திட்டங்களை மேற்கொண்டதற்கான அங்கீகாரமாக அவருக்கு இந்த விருது கிடைத்திருப்பதாக கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.