வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
வால்பாறை ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் அரசினா் தொழிற்பயிற்சி மையம் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுளின் கீழ் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
2025-2026-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 104 இடங்களுக்கு 35 இடங்கள் மட்டும் நிரப்பட்டுள்ளதால் சோ்க்கைக்கான கால அவசாகம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக அரசு தொழிற்பயிற்சி மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.