வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து
சென்னை வேளச்சேரியிருந்து சனிக்கிழமை (ஆக. 23) இரவு நேரத்தில் இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திச் குறிப்பு: சென்னை கடற்கரை ரயில்வே யாா்டில் சனிக்கிழமை (ஆக. 23) நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 24) அதிகாலை 3 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், ஆக. 23-இல் வேளச்சேரியிலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரை செல்லும் புகா் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், ஆக. 24 -இல் கடற்கரையிலிருந்து அதிகாலை 5 மணிக்கு வேளச்சேரி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.