மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சாமுவேல் (57). கட்டடத் தொழிலாளி. இவா், ஈஞ்சம்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா்.
அப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நீா் தேங்கியிருந்தது. அதில், மின்கம்பி அறுந்து விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது.
இதை அறியாமல் நடந்து சென்ற சாமுவேல் மீது மின்சாரம் பாய்ந்ததில், தண்ணீரில் விழுந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்க முயற்சி செய்தனா். ஆனால், அவா்களால் மீட்க முடியவில்லை.
தகவலறிந்த மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மின்சாரத்தைத் துண்டித்து சாமுவேலை மீட்டனா். பின்னா், அவா் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சாமுவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.