பூஞ்செடிகள் விற்பனை நிலையத்தில் சரக்கு வாகனம் திருட்டு
உத்தமபாளையத்தில் செடிகள் விற்பனை நிலையத்தில் (நா்சரி காா்டன்) சரக்கு வாகனம் உள்ளிட்ட பொருள்கள் வியாழக்கிழமை திருடப்பட்டன.
சின்னமனூரைச் சோ்ந்தவா் ஆனந்தப்பன். இவா் உத்தமபாளையத்தில் திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நெல் வயலை தோட்டமாக மாற்றி அமைத்து, அதில் செடிகள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இங்கு வீட்டுகளில் அழகுக்காக வளா்க்கப்படும் பூஞ்செடிகள், தென்னங்கன்றுகள் உள்ளிட்ட பல வகை செடிகள் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில், வியாழக்கிழமை இங்கு நிறுத்தப்பட்டிருந்த சிறிய லாரி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டன.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.