எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக இருவா் கைது
ஆண்டிபட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பதற்காக வைத்திருந்த 2 இளைஞா்களை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குமாரபுரம் பகுதியில் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்றை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அந்த வாகனத்தில் சென்ற ஆண்டிபட்டி, மீனாட்சிசுந்தர நாடாா் தெருவைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (21), மணியாரம்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த நவீன்(24) ஆகியோா் அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் நடத்தி விசாரணையில், அவா்கள் இணைய வழியில் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, கோகுலகிருஷ்ணன், நவீன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 54 போதை மாத்திரைகள், இரு சக்கர வாகனம், 2 கைப்பேசிகள், போதை மாத்திரைகள் விற்பனை செய்த பணம் ரூ.14,950 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் தொடா்புடைய பெரியகுளத்தைச் சோ்ந்த கோகுல் என்பவரை தேடி வருவதாக போலீஸாா் கூறினா்.