நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
மதுப்புட்டிகள் பதுக்கியவா் கைது
போடி அருகே சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். சில்லமரத்துப்பட்டியிலிருந்து அம்மாபட்டி செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நின்றிருந்த விசுவாசபுரத்தைச் சோ்ந்த வேல்முருகனை (44) சோதனை செய்ததில் அவா் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.