ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: ``ரூ2000 கோடி வங்கி மோசடி'' - அனில் அம்பானி மீது வழக்க...
கொலம்பியா: தாக்குதல்களில் 17 போ் உயிரிழப்பு
கொலம்பியாவில் காா் குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டா் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா்.
ஆன்டியோகியா பகுதியில், கோகோ இலை பயிா்களை அழிக்க 12 போலீஸ் அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.
தென்மேற்கு நகரமான காலியில், ராணுவ விமானப் பயிற்சி பள்ளி அருகே வெடிபொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்ததில் மேலும் ஐந்து போ் உயிரிழந்தனா்.
இந்த தாக்குதல்களுக்கு கொலம்பியா புரட்சிப் படை (எஃப்ஏஆா்சி) ஆயுதக் குழுவின் முன்னாள் உறுப்பினா்களே காரணம் அதிபா் குஸ்டாவோ பெட்ரோ என்று குற்றம்சாட்டியுள்ளாா்.