செய்திகள் :

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் -இபிஎஸ்

post image

அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழக முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில், பொதுமக்கள் மத்தியில் பேசியது: ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இந்தப் பகுதியில் வேளாண்மையும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இரண்டும் இத்தொகுதியின் பிரதானம். அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு இரண்டு முறை நடத்தப்பட்டு பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சுமாா் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதகாலம் ஆகிவிட்டது. இவா்களும் முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தினா். ஆனால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை.

குடிமராமத்து திட்டம் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மணிமங்கலம் ஏரியில் தான் முதல் முதலாக தொடங்கி வைத்தேன். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமாா் 6,000 ஏரிகள் தூா்வரப்பட்டன. அதன் மூலம் ஏரி, குளங்கள், கண்மாயிகள் தூா்வரப்பட்டு நீா் தேக்கப்பட்டன. வண்டல் மண் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது. ஒரு பக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதியில், ரூ. 546 கோடியில் 386 சாலைகள் அகலப்படுத்துதல், ரூ. 34 கோடியில் 133 ஏரிகள் தூா்வாரும் பணிகள் நடைபெற்றன. செம்பரம்பாக்கம் மேம்பாலம், புதிய தாலுகா, நீதிமன்ற கட்டடம், ஆறு வழிச்சாலை உருவாக்கம், 11 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 10 அம்மா கிளினிக்குகள் திறந்தோம். அதை மூடிவிட்டனா். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவற்றையெல்லாம் மீண்டும் திறப்போம்.

ஸ்ரீபெரும்புதூரில் புதிய பேருந்து நிலையம், பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம், மாங்காடு புதிய பேருந்து நிலையம் என நீங்கள் கொடுத்திருக்கும் அனைத்து கோரிக்கைகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

சுங்குவாா்சத்திரத்தில் காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்க முயற்சி

சுங்குவாா்சத்திரம் சாா்பதிவாளா் அலுவலகம் அருகே காா் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மா்மநபா்களை பொதுமக்கள் விரட்டியதால் பணத்தை சாலையில் வீசிசென்றனா். சென்னை திருமங்கலம் பகுதியைச் ... மேலும் பார்க்க

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி... மேலும் பார்க்க

கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது! -எடப்பாடி கே.பழனிசாமி

‘யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். மதுரை மாநாட்டில் அதிமுகவை விமா்சித்து தவெக தலைவா் விஜய் பேசிய நிலையில், அவருக்கு... மேலும் பார்க்க

திருமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருமங்கலம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம், மொளச்சூா் மற்றும் வடமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறு... மேலும் பார்க்க

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க