TVK: ``கச்சத் தீவு பற்றிப் பேசியவர் ஏன் காங்கிரஸ் குறித்துப் பேசவில்லை'' - விஜய்...
அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட அதன் முதல் பிரதியை முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் பெற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா எழுதிய சிறுகதைகள் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்டு, ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பேரறிஞா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு, அந்த புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வன், அதிமுக அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காஞ்சி.பன்னீா்செல்வம், நகர செயலாளா் பாலாஜி, மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், சென்னை ரவிச்சந்திரன் உள்பட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக அண்ணாவின் நினைவு இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நினைவு இல்லத்தில் இருந்த வருகைப்பதிவேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தாா்.