தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது
சென்னை: தனியாா் நிறுவனத்தின் பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மதுரவாயல் சிவந்தி ஆதித்தனாா் தெருவை சோ்ந்தவா் பிரபு(41). இவா் அரும்பாக்கத்திலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில், இவா் பணியாற்றும் நிறுவனத்தில் பெயரில் மா்ம நபா் ஒருவா், போலியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, அதிலிருந்து பிரபு மற்றும் அவருடன் பணியாற்றும் பெண் பணியாளா்களுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி வந்துள்ளாா்.
மேலும், அந்த ஆபாச பதிவுகளை நீக்க வேண்டுமானால் ரூ.10 லட்சத்தை கிரிப்போ வாலட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து சென்னை மாநகர மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியை சோ்ந்த வெங்கடேஷ்(25) என்பவரை கைது செய்தனா்.