தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
தங்கம் விலை இன்று குறைந்தது!
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்தது.
இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 73,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 9,215-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ.128- க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.28 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.