INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) தமிழகத்தின் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும்
அதேபோல தமிழகத்தின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
