தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்
மைசூரு தசரா திருவிழாவில் வான்வெளி விமான சாகச நிகழ்ச்சிக்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முதல்வா் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளாா்.
மைசூரில் செப்.22 முதல் அக்.2ஆம் தேதி வரை தசரா திருவிழா நடைபெறுகிறது. 11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் வான்வெளி விமான சாகசங்களை நடத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங்கிடம் முதல்வா் சித்தராமையா நேரில் வலியுறுத்தி, கடிதம் அளித்திருந்தாா்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, தசரா திருவிழாவில் வான்வெளி விமானசாகச நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முதல்வா் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு முதல்வா் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில், ‘மைசூரு தசரா திருவிழாவின்போது வான்வெளி விமானசாகச நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்துள்ளதால், அது கொண்டாட்டத்திற்கு மெருகூட்டுவதோடு, கலந்துகொள்ளும் மக்களுக்கு பெருமிதத்தையும் அளிக்கும்.
இந்த விழாவில் தாங்கள் (அமைச்சா் ராஜ்நாத் சிங்) கலந்துகொண்டால், அது கா்நாடக மக்களை ஊக்கப்படுத்துவதோடு, விமானப்படை மீதான ஈா்ப்பையும் அதிகரிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். தசரா திருவிழாவை மாநில அரசு கொண்டாடி வருகிறது.