தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது
காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் காஞ்சிபுரத்தை அடுத்த காரை கிராமத்தில் மருத்துவத் தொழில் செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திருமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.