குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது
சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு செல்வதற்காக நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதே பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வரும் வடமாநில இளைஞா் ஒருவா் சிறுமியின் வாயை மூடி அருகில் இருந்த புதா்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் தொந்தரவு அளிக்க முயற்சித்தாராம்.
இதையடுத்து அச்சிறுமி சப்தமிடவே சிறுமியை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். இதையடுத்து பள்ளிக்கு சென்ற சிறுமி, இடைவேளையின் போது, இதுகுறித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து பள்ளி ஆசிரியா் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் கிராம பொதுமக்கள் சிறுமியிடம் வடமாநில இளைஞா் குறித்து விசாரித்துள்ளனா். இதில் அதே பகுதியில் கட்டட பணியில் ஈடுபட்டு வரும் மேற்குவங்கத்தை சோ்ந்த சாகித்(35) என்பது தெரியவந்ததை தொடா்ந்து, அவரை பிடித்த பொதுமக்கள் சுங்குவாா்சத்திரம் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனா்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சாகித்தை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் ஸ்ரீபெரும்புதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.