பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டுதல் முகாம்
காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பக அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற முகாமில் தண்டரை, மெய்யூா் ஓடை, சிறுபினாயூா், மலையாங்குளம், சீதாவரம், குரும்பிறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தை சோ்ந்த 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கண்காணிப்பக நிா்வாகி து.ராஜி ஆதாா் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் எவ்வாறு பெறுவது, யாரை அணுகவேண்டும் என்பது குறித்து விரிவாக பயிற்சியளித்தாா்.
தொண்டு நிறுவன பணியாளா் தங்கவேல் முன்னிலை வகித்தாா். பணியாளா் ஏழுமலை நன்றி கூறினாா்.