செய்திகள் :

பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!

post image

பழங்குடி சமூகத்தினருக்கு சொந்தமான 8.10 கோடி சதுர அடி நிலத்தை அதானியின் சிமெண்ட் ஆலைக்கு ஒதுக்கிய அசாம் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியினரின் 3,000 பிகா (8.10 கோடி சதுர அடி) நிலத்தை மகாபால் சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

நீதிபதி அதிருப்தி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அந்த நிலங்கள் தரிசு நிலம் என்றும், சிமெண்ட் ஆலை நடத்துவதற்கு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் மேதி, ”3,000 பிகாக்கள் என்பது ஒரு முழு மாவட்டம். என்ன நடக்கிறது? ஒரு தனியார் நிறுவனத்துக்கு 3,000 பிகாக்கள் வழங்கப்படுகிறதா? தரிசு நிலம் என்றாலும், 3,000 பிகாக்கள் கொடுக்கப்படுவதா?

இது என்ன மாதிரியான முடிவு? இது என்ன நகைச்சுவையா? தனியார் நலன் அல்ல, பொதுநலனே முக்கியம்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கண்டனம்

அசாம் அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில்,

“அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிமெண்ட் ஆலைக்காக 3,000 பிகா (8.1 கோடி சதுர அடி) பழங்குடி நிலத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஏழை மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, நாட்டின் வளங்களை மோடியின் நண்பரான அதானிக்கு வெட்கமின்றி கொடுக்கிறது முதலாளித்துவத்துக்கு ஆதரவான பாஜக அரசு.

இது மக்களுக்கான ஆட்சி அல்ல, மோடியின் நண்பர் அதானியின் ஆட்சி.

அவர்களின் செயல்களுக்கு அவர்களையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். மக்களுக்கு உண்மையாக சேவை செய்யும் அரசைக் கோர வேண்டிய நேரமிது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி குழுமம் மறுப்பு

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அதானி குழுமம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மகாபால் சிமெண்ட் நிறுவனத்துக்கு அதானி குழுமத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assam government gives 8 crore square feet of tribal land to Adani

இதையும் படிக்க : தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் கூட்டம்: பிரதமர் மோடி, சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் கூட்டம் நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தொடங்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கே... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குத் திருட்டில் ஈடுபட்ட மூன்று தேர்தல் ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாக்குத்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க