தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 30,992 கன அடியிலிருந்து 36,242 அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை காரணமாக நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,338 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து இன்று காலை 4 மணிக்கு வினாடிக்கு 30,992 கன அடியாகவும் காலை 8 மணிக்கு வினாடிக்கு 36,242 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கன அடி நீரும் உபரி நீர் போக்கு வழியாக வினாடிக்கு 28,700 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 117.45 அடியாகவும் நீர் இருப்பு 89.46 டிஎம்சியாகவும் உள்ளது.