செய்திகள் :

ட்ரம்ப் சந்திப்பு: ``அமெரிக்கா காட்டிய `இந்த' முக்கிய சிக்னலைப் பாராட்டுகிறோம்'' - ஜெலன்ஸ்கி

post image

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்து முடிந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ஏழு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த 15-ம் தேதி, ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்த நிலையில், 'போர் நிறுத்தம்' குறித்து ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு நடந்தது.

ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி

பேச்சுவார்த்தை வார்த்தையில் முன்னேற்றம்

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இன்று, வாஷிங்டன்னில் முக்கியமான பேச்சுவார்த்தை நடந்தது. அதிபர் ட்ரம்பிடம் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினோம். அந்த நீண்ட மற்றும் விரிவான உரையாடலில், போர்க்களத்தின் சூழல் மற்றும் அமைதியைக் கொண்டுவருவதற்கான எங்களது முயற்சிகள் குறித்தும் பேசினோம்.

ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபருடன் பல்வேறு சந்திப்புகளும் நடந்தது.

பாதுகாப்பு உறுதிகள் குறித்து விவாதித்தோம். இது போர் நிறுத்தத்திற்கான ஆரம்பத்தின் முக்கிய விஷயமாகும்.

பாதுகாப்பு உறுதியின் ஒரு பகுதியாக இருப்பதிலும், ஆதரவாக இருப்பதிலும் அமெரிக்கா காட்டும் முக்கிய சிக்னலை நாங்கள் பாராட்டுகிறோம்.

நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி

குழந்தைகளைத் திரும்ப அனுப்புதல், சிறை கைதிகளை விடுவித்தல், ரஷ்யா பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவித்தல் ஆகியவற்றிற்கு இன்று அதிக கவனம் கொடுக்கப்பட்டது.

தலைவர்கள் அளவிலான சந்திப்பிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு தருகிறார். இந்த மாதிரியான சிக்கலான விஷயத்திற்கு அத்தகைய சந்திப்பு மிக முக்கியமானது.

இந்த அழைப்பிற்கும், ஸ்பெஷல் சந்திப்பிற்கு அதிபர் ட்ரம்பிற்கு நன்றி. இம்மானுவல் மக்ரோன், கீர் ஸ்டார்மர், ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜியோர்ஜியா மெலோனி, அலெக்சாண்டர் ஸ்டப், உர்சுலா வான் டெர் லேயன், மார்க் ரூட்டே ஆகிய என்னுடன் இன்று இருந்த தலைவர்களுக்கும் நன்றி.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி

இன்று ஒரு முக்கியமான படியாகும். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உண்மையான ஒற்றுமையின் நிரூபணம்.

ஐரோப்ப தலைவர்கள் தனிப்பட்ட முறையில் உக்ரைனை ஆதரிக்கவும், உண்மையான அமைதியை நிலைநாட்டுவது குறித்து பேசவும் வந்தனர்.

இந்தப் போரை கண்ணியமாக முடிவுக்குக் கொண்டுவர பாடுபடும் அனைத்து நட்பு நாடுகளுடனும் எங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, எங்கள் பணியைத் தொடர்கிறோம். உதவி செய்யும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

காற்றில் மிதக்கும்; செல்களுக்குள் செல்லும்; மைக்ரோ பிளாஸ்டிக் பற்றிய கம்ப்ளீட் விளக்கம்!

பெண்ணின் கருமுட்டையில்கூட நேனோ பிளாஸ்டிக் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது எப்படி ரத்தத்தில் கலக்கிறது என்பதற்கான காரணம், இதுவரை சரிவர தெரியவில்லை. என்றாலும் குடலில் சேரும் நேனோ பிளாஸ... மேலும் பார்க்க

`வீடுதோறும் சென்றும் தகுதியான வாக்காளர்கள் எப்படி நீக்கப்பட்டனர்?' -ECI-க்கு ஸ்டாலினின் 7 கேள்விகள்

பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், சுமார் 65 லட்சம் வாக்காள... மேலும் பார்க்க

``சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு துணை போகாதீர்'' - தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் அன்புமணி

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்சென்னையில் இரண்டு மண்டலங்களை தனியார்மயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், தங்களுக்குப் பணிநிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1 முதல் 13 நாள்கள் ரிப்பன் மாளிக... மேலும் பார்க்க

``கிரிமீயா கிடைக்காது; நேட்டோவில் சேரக்கூடாது'' - ஜெலன்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப் பதிவு

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்து முடிந்தது. இதையொட்டி, இன்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் ட்ரம்பை ச... மேலும் பார்க்க

செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

தொண்டருக்கு `பளார்’விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் `யுனெஸ்கோ’, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை என்பதாக குறிப்பிட்டிரு... மேலும் பார்க்க

Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதேன்?

Doctor Vikatan: யாரேனும் உடல் எடை குறைந்தாலே, 'சுகர் வந்துருச்சா' என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதே சமயத்தில், எடையைக் குறைத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்... மேலும் பார்க்க