செய்திகள் :

செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

post image

தொண்டருக்கு `பளார்’

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருக்கும் செஞ்சிக் கோட்டையை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரித்திருக்கும் `யுனெஸ்கோ’, அது மராட்டிய மன்னரான சிவாஜியின் கோட்டை என்பதாக குறிப்பிட்டிருக்கிறது.

அதையடுத்து பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும், தமிழார்வலர்களும் அது தமிழ் மன்னரின் கோட்டை என்று அறிவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் `செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோணுக்கு சொந்தமான கோட்டை’ என்ற நிகழ்ச்சி, செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்றது.

அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். கட்சி நிர்வாகிகள் பேசி முடித்தபிறகு பேச வந்த சீமானை படமெடுக்க செய்தியாளர்கள் மேடையின் அருகில் சென்றனர்.

சீமான்

அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செய்தியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய பவுன்சர்கள், அவர்களை நெட்டித் தள்ளினர்.

அதற்கு, `உங்கள் செய்தியை சேகரிப்பதற்குத் தானே வந்திருக்கிறோம். எங்களை தகாத வார்த்தைகளால் எப்படி திட்டலாம் என பவுன்சர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது மேடையில் இருந்து அந்த வாக்குவாதத்தைப் பார்த்த சீமான், சட்டையை மடித்துக் கொண்டு கீழே இறங்கி செய்தியாளர்களை அடிப்பதற்குப் பாய்ந்தார். அப்போது அங்கே நின்றிருந்த ஒரு தொண்டரை கண்ணத்தில் பளார் என்று அறைந்தார். அதையடுத்து தொண்டர்கள் அங்கு குவிய ஆரம்பித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், செய்தியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.

`ஒரு கட்சியின் தலைவர் பொது மேடையில் இப்படி நிதானத்தை இழக்கலாமா?’ என்று பேசியபடியே அங்கிருந்து சென்றனர் செய்தியாளர்கள்.

``கிரிமீயா கிடைக்காது; நேட்டோவில் சேரக்கூடாது'' - ஜெலன்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப் பதிவு

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்து முடிந்தது. இதையொட்டி, இன்று அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் ட்ரம்பை ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதேன்?

Doctor Vikatan: யாரேனும் உடல் எடை குறைந்தாலே, 'சுகர் வந்துருச்சா' என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதே சமயத்தில், எடையைக் குறைத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்... மேலும் பார்க்க

``சமூக சேவை, விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பவர்'' -சி.பி.ராதாகிருஷ்ணனை புகழும் பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை முன்நிறுத்தியுள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரைக் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

``பாஜக தலைவர்கள் OPS-ஐ மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்'' - டிடிவி தினகரன்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி... மேலும் பார்க்க

துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்: RSS பின்னணி, ரத யாத்திரை, ஆளுநர் - யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி, துணைக் குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த ந... மேலும் பார்க்க

Health: சூப்பர் மார்க்கெட்ல கொடுக்கிற பில்லை கையில வெச்சுக்கிறீங்களா? இத படிங்க!

கடைகள்ல, சூப்பர் மார்க்கெட்கள்ல மற்றும் மால்கள்ல கொடுக்கிற பேப்பர் பில்களை ரொம்ப நேரம் கையில வெச்சுக்கிறீங்களா? அந்த தெர்மல் பேப்பர்கள்ல இருக்கிற ரசாயனம் ஆண், பெண் ரெண்டு பேரோட இனப்பெருக்க ஆரோக்கியத்த... மேலும் பார்க்க