இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18), மாற்றமின்றி விற்பனையாகிறது.
சென்ற வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த ஆக. 11-இல் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000-க்கும், ஆக. 12-இல் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360-க்கும், ஆக. 13-இல் சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.74,320-க்கும், ஆக. 14-இல் விலை மாற்றமின்றி சவரன் ரூ.74,320-க்கும், ஆக. 15-இல் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74,240-க்கும் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,275-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,200-க்கும் விற்பனையானது.
இதன் மூலம் சென்ற வாரத்தில் மட்டும் தங்கம் விலையானது, சவரனுக்கு ரூ.1,360 வரை குறைந்து விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று(ஆக. 18) மாற்றமின்றி கிராம் ரூ.9,275-க்கும், சவரன் ரூ.74,200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் மாற்றமின்றி கிராம் ரூ.127- க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்