செய்திகள் :

ராமதாஸும் அன்புமணியும் நாடகமாடுகிறார்கள்: காடுவெட்டி குரு மகள்

post image

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸும் அன்புமணியும் நாடகமாடுகிறார்கள் என்று காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை குற்றம்சாட்டியிருக்கிறார்.

பாமகவில் நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே மோதல் வெடித்து தனித்தனியாக பொதுக்குழுக்களை கூட்டி வரும் நிலையில், சென்னையில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தரப்பில் பேசுகையில், காடுவெட்டி குருவை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இருவருமே நாடகமாடுகிறார்கள். காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் தனியாக அமைப்பை தொடங்கவிருக்கிறோம்.

வன்னியர் சமூகத்திற்கு ராமதாஸும் அன்புமணியும் எதுவும் செய்யவில்லை. ராமதாஸ் தனது மகளையும், அன்புமணி தனது மனைவியையும் அரசியலில் கொண்டுவர நினைக்கிறார்கள் என்று விருதாம்பிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தமிழக எம்.பி.க்கள் ஆதரவளிக்க வேண்டும்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எ... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் 7 கேள்விகள்!

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜகவுடன் கைகோத்து, தோ்தல் ஆணையம் வாக்கா... மேலும் பார்க்க

திரைப்பட பாணியில் 40 சவரன் நகை, ரூ. 7 லட்சம் பணம் கொள்ளை!

குளித்தலையில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், அவர்களை கட்டிப்போட்டு விட்டு 40 சவரன் நகை மற்றும் ரூ. 7 லட்சம் பணம் மற்றும் 3 செல்ஃபோன் உள்ளிட்டவற்... மேலும் பார்க்க

ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்... மேலும் பார்க்க

ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்... மேலும் பார்க்க

மண் அள்ளியதாகப் புகார்: இளைஞர் மண்வெட்டியால் அடித்துக் கொலை!

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இரவில் டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக, காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு... மேலும் பார்க்க