செய்திகள் :

ஆவணி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

post image

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆவணி மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

 கிரகமாற்றம்:

21.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

அஸ்வினி:

இந்த மாதம் மனதில் இருந்த கவலை நீங்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம்.

பரணி:

இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

க்ருத்திகை:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: சிவனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 30, 31, செப் 01

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 11, 12

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருக்க - தனவாக்கு ஸ்தானத்தில் இருக்கும் புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும் மாதம். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். அனைத்து தடைகளும் அகலும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

க்ருத்திகை:

இந்த மாதம் எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

ரோகினி:

இந்த மாதம் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.

ம்ருகசீரிஷம்:

இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 02, 03

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 17, 18, செப் 13, 14

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ராசியில் குரு, சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், கேது - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று ராசியில் இருந்து சுக்கிரன்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ராசியில் இருக்கும் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள் வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

ம்ருகசீரிஷம்:

இந்த மாதம் தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.

திருவாதிரை:

இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

புனர்பூசம்:

இந்த மாதம் வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

 பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 04, 05, 06

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 19, 20, செப் 15, 16

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

 கிரகமாற்றம்:

21.08.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  ராசிக்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று ராசியில் இருந்து சுக்கிரன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்தமாதம் அஷ்டம ஸ்தானம் மிக பலமாக இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதே வேளையில் நம் ராசிக்கு முன்னும் பின்னும் கிரகஙக்ள் இருப்பதால் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.

புனர்பூசம்:

இந்த மாதம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் தரும சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பூசம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

ஆயில்யம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பரிகாரம்: திங்கள்கிழமையில் ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். மன அமைதியை தரும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 07, 08

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 21, 22

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன், கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரக நிலைகள் உள்ளன.

 கிரகமாற்றம்:

21.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து புதன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் நமது திரிகோணம் மிக பலமாக இருக்கிறது. பணவரவு எதிர்பார்த்ததை போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதே வேளையில் ராசியை செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மகம்:

இந்த மாதம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பூரம்:

இந்த மாதம் செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

உத்திரம்:

இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: நரசிம்மரை தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 09, 10

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசி ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று ராசியில் இருந்து புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெண்களுக்கு சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும்.

உத்திரம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம்.

சித்திரை:
இந்த மாதம் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: புதன்கிழமையில் ஆஞ்சனேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.

சந்திராஷ்டம தினங்கள்: செப் 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 26, 27

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், கேது - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் ராசிக்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ராசியை இருசூரியன், புதன், குருமார்களும் பார்ப்பதால் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணதேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

சித்திரை:

இந்த மாதம் உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

ஸ்வாதி:

இந்த மாதம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

விசாகம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

 பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 17, 18, செப் 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 28, 29

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், கேது - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம்:

இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.

அனுஷம்:

இந்த மாதம் உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

கேட்டை:

இந்த மாதம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

 பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 19, 20, செப் 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 30, 31, செப் 01

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்து வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். பெண்களுக்கு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மூலம்:

இந்த மாதம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.

பூராடம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

உத்திராடம்:

இந்த மாதம் குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 02, 03

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

 கிரகமாற்றம்:

21.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ரண ருண ரோக ஸ்தானமும் அஷ்டம ஸ்தானமும் பலமாக இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். பெண்களுக்கு யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உத்திராடம்:

இந்த மாதம் முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

திருவோணம்:

இந்த மாதம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பர செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும்.

அவிட்டம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா காரியங்களும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 04, 05, 06

கும்பம் அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ராசியில் சனி (வ), ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் கேந்திரங்கள் பலமாக இருக்கிறது. அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

அவிட்டம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும்.

சதயம்:

இந்த மாதம் விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். தனாதிபதி சூரியன், புதன், குருவின் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.

பூரட்டாதி:

இந்த மாதம் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் சஞ்சாரத்தால் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். சூரியன், புதன், குரு சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 07, 08

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், கேது - சப்தம களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

21.08.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன்  பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து புதன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11.09.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14.09.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15.09.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இட மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். பெண்களுக்கு எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பூரட்டாதி:

இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.

ரேவதி:

இந்த மாதம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

பரிகாரம்: நவக்கிரக சூரியன், புதன், குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.  

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: செப் 09, 10

தமிழ் சினிமாவுக்கு நிறைய சசிகுமார்கள் தேவை: முத்தையா

நடிகர் சசிகுமார் குறித்து இயக்குநர் முத்தையா நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம் சினிமாவுக்க... மேலும் பார்க்க

வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்த... மேலும் பார்க்க

இன்றுமுதல் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு!

அமெரிக்காவில் திங்கள்கிழமை தொடங்கும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் களம் காண்கின்றனா்.இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கும் இப்போட்டியில... மேலும் பார்க்க

பயா்ன் மியுனிக் சாம்பியன்!

ஜொ்மனியில் நடைபெற்ற சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில் பயா்ன் மியுனிக் 2-1 கோல் கணக்கில் விஎஃப்சி ஸ்டட்காா்ட் அணியை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.இப்போட்டியில் அந்த அணிக்கு இது 11-ஆவது சாம... மேலும் பார்க்க

செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் ஆட்டம் ‘டிரா’!

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், செல்ஸி - கிரிஸ்டல் பேலஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.கடந்த மாதம் கிளப் உலகக் கோப்பை சாம்பியனாக முடி சூட... மேலும் பார்க்க

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் சின்னா் - அல்கராஸ் பலப்பரீட்சை!

மெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் - நம்பா் 2 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் பல... மேலும் பார்க்க