Serial Update: அமெரிக்கா செல்லும் கனிகா; `கயல்’க்கு இனி புது சகோதரர்; கம் பேக் க...
காவல்துறை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் செயல்முறைகள் பயிற்சி வழங்கிய மீனாட்சி மிஷன் மருத்துவமனை
மருத்துவ அவசரநிலைகளை திறம்பட எதிர்கொள்வதில் எப்போதும் தயாராக இருப்பதற்கான ஒரு முன்னோடித்துவ நடவடிக்கையாக தமிழ்நாடு அரசின் மதுரை மாவட்ட காவல்துறை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் (MMHRC) இணைந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது; மதுரை மாவட்ட காவல்துறை பணியாளர்களுக்கு CPR (Cardio-Pulmonary Resuscitation) மற்றும் BLS (Basic Life Support) ஆகியவற்றில் மாவட்ட அளவிலான பயிற்சியளிப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
திடீரென ஏற்படும் cardiac arrest மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான அவசர நிலைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு உயிர்காக்கும் அவசரநிலை சிகிச்சை உத்திகளில் மாவட்டத்தின் ஒட்டுமொத்த காவல்துறையினரும் முறைப்படி பயிற்சியளிக்கப்படுவது தமிழ்நாடு மாநிலத்தில் இதுவே முதன்முறையாகும். தொடர்ந்து வரும் 18 சனிக்கிழமைகளில், மதுரை மாவட்டம் முழுவதிலும் பணியாற்றுகிற காவல்துறையினருக்கு இதில் சிறப்பான பயிற்சியளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இது தொடர்பான முதல் நேரடி அமர்வு மதுரையிலுள்ள SS மஹாலில் நடைபெற்றது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை குழுவினர், CPR மற்றும் BLS ஆகியவற்றைப் பற்றித் தெளிவான விளக்கம் மற்றும் செயல்முறை பயிற்சிகளை வழங்கினர். போக்குவரத்து விபத்துகள், திடீரென ஏற்படும் மருத்துவ அவசரநிலைகளின் போது உதவி வழங்கும் முதல் நபர்களாக காவல்துறை அதிகாரிகளே பெரும்பாலும் இருப்பதால் இந்த பயிற்சி பெற்றவர்களாக அவர்கள் இருப்பது மிக முக்கியம். மருத்துவ உதவி வந்து சேரும் வரை, “Golden Hour” என அழைக்கப்படுகிற நேரத்தை, “சிகிச்சைக்கான நேரமாக” மாற்றுவது இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த பயிற்சி அமர்வில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் , MMHRC-ன் அவசர சிகிச்சை பிரிவின் இயக்குநர் திரு. நரேந்திர நாத் ஜெனா மற்றும் இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் சிறப்பு மருத்துவர்களான டாக்டர். S. பிரபு, டாக்டர். ஷீமா கண்மணி மற்றும் டாக்டர். நான்சி ஆகியோருடன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் திரு. சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.